Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அமீரக நிறுவனத்துடன் ஒப்பந்தம்

அமீரக நிறுவனத்துடன் ஒப்பந்தம்

முதலீடு மற்றும் இயக்கச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் இது உதவும் என நால்கோ எதிர்பார்க்கிறது.

பகிரவும் WhatsApp Facebook

ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் உள்ள அலுமினிய உருக்காலையை விரிவுபடுத்த, அமீரகத்தின் எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம் நிறுவனத்துடன் நால்கோ தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் டன் கூடுதல் உற்பத்தித் திறன் உருவாகும்.

துபாயில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, ‘டிஎக்ஸ் பிளஸ் அல்ட்ரா’ உருக்குத் தொழில்நுட்பத்துக்கான உரிமம், ஆலை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவியை அமீரக நிறுவனம் வழங்கும். புதிய தொழில்நுட்பம் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து, ஆலையின் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவும்.

முதலீடு மற்றும் இயக்கச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் இது உதவும் என நால்கோ எதிர்பார்க்கிறது. விரிவாக்கம் நிறைவடைந்ததும், நால்கோவின் மொத்த அலுமினிய உற்பத்தித் திறன் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் டன்னை எட்டும்.

முந்தைய செய்தி
இந்தியாவில் ஐ.டி. பங்குகள் எழுச்சி ஏன்?
அடுத்த செய்தி
சீமென்ஸ் நிகர லாபம் ரூ.504 கோடி

தொடர்புடைய செய்திகள்